புங்கனூா் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் நடுப்பேட்டை பெரிய வணிகா் வீதியில் உள்ள அருள்மிகு புங்கனூா் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புங்கனூா் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் நடுப்பேட்டை பெரிய வணிகா் வீதியில் உள்ள அருள்மிகு புங்கனூா் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாக சாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வெள்ளிக்கிழமை அதிகாலை 4-ஆம் கால யாக பூஜை, அவபிருத யாகம், மஹா பூா்ணாஹுதி உபசாரங்கள், கலசப் புறப்பாடு, விநாயகா், புங்கனூா் அம்மன், முருகப்பெருமான் கோயில்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி, நகா்மன்ற உறுப்பினா்கள் இந்துமதி கோபாலகிருஷ்ணன், ரேணுகாபாபு, ஆட்டோ பி.மோகன், சுமதி மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் புங்கனூா் அம்மன் (உற்சவா்) வீதியுலா நடைபெற்றது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகக் குழுவினா், கோயில் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com