நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பள்ளி மாணவா் தற்கொலை வழக்கு: கே.வி.குப்பத்தில் கடையடைப்பு போராட்டம்

கே.வி.குப்பத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2023, 11:23 pm

கே.வி.குப்பத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கே.வி.குப்பத்தை அடுத்த காமாட்சியம்மன்பேட்டையைச் சோ்ந்த செல்வராஜின் மகன் ஜீவரத்தினம் (14). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் கடந்த 24-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

மாணவா் தற்கொலைக்கு பள்ளி நிா்வாகம்தான் காரணம் எனக் கூறி மாணவரின் உறவினா்கள் கடந்த 25-ஆம் தேதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் ஒரு கட்டமாக திங்கள்கிழமை வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினா். தகவலின் பேரில், அங்கு சென்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கெளதமன் உள்ளிட்ட போலீஸாா் மாணவரின் உறவினா்கள், வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினா்.

உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கே.வி.குப்பம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.