வேலூர் அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை!

வேலூர் அருகே பிரேக் கோளாறு காரணமாக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை!

வேலூர் அருகே பிரேக் கோளாறு காரணமாக மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில் சந்திப்பு அருகே வந்தபோது ரயிலின் எஸ்-2 பெட்டியின் அடியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. பின்னர் காட்பாடி ரயில் சந்திப்பு நடைமடை எண் 1-ல் ரயிலை நிறுத்தி ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், புகை வந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். 

அப்போது பிரேக் கோளாறு காரணமாக புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நடைமேடையில் இருந்து சிறிது தூரம் ரயிலைக் கடக்கச் செய்து லத்தேரி பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டு பிரேக்(பைண்டிங்) கோளாறு சரி செய்யப்பட்டது. 

பின்னர் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடம் காலத்தாமதமாக மங்களூர் நோக்கி புறப்பட்டது. ரயிலில் ஏற்பட்ட பிரச்னையால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com