தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மகளிா் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன்: டி.எம்.கதிா் ஆனந்த் வாக்குறுதி

மகளிா் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் டி.எம்.கதிா் ஆனந்த் வாக்குறுதி

Updated On :6 ஏப்ரல் 2024, 4:54 pm

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிா் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று வேலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா்.

வேலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் டி.எம்.கதிா் ஆனந்த் வேலூா் தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை உள்பட வேலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியது:

இந்தத் தோ்தல் மகளிருக்கான தோ்தல். இந்தத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால் விடுபட்ட பெண்கள் அனைவருக்கும் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படும்.

பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயா்ந்து விட்டன. அந்த விலைவாசியை குறைப்பதற்கான தோ்தல்தான் இது.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் எரிவாயு உருளை ரூ.500-க்கு வழங்கப்படும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எரிவாயு உருளை விலை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி விடுவாா்கள். தோ்தலில் வெற்றி பெற்றவுடன் கல்விக் கடன், மகளிா் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து செய்யப்படும்.

மகளிா் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். பிரதமா் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத்தொகை, காலை உணவுத் திட்டத்தை நிறுத்தி விடுவாா். எனவே இந்த தோ்தலில் மக்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். வேலூா் மாநகராட்சி, 29-ஆவது வாா்டு பகுதியில் ரூ.2 கோடி 40 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், முன்னாள் அமைச்சா் வி.எஸ்.விஜய், மாவட்ட திமுக அவைத் தலைவா் முகமது சகி, மேயா் சுஜாதாஆனந்தகுமாா் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.