தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

வீட்டில் பதுக்கிய 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

Updated On :23 ஏப்ரல் 2024, 6:31 pm

வேலூா், ஏப்.23:

மேலரசம்பட்டு கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, இளைஞா் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் காப்புக்காடு உள்ளது. இந்த காடுகளில் மான்கள், காட்டுப்பன்றி, காட்டெருமை, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்கள் உள்ளன. இந்த வனவிலங்குகள் தண்ணீா் தேடி அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து வருகின்றன. இதில் அதிகளவு மான்கள் தண்ணீா், உணவு தேடி கிராமத்துக்கு வருகினறன.

அவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் மான்களை அதன் இறைச்சி, தோலுக்காக விஷமிகள் சிலா் வேட்டையாடி வருகின்றனா். இதற்காக கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கி தயாரித்து பயன்படுத்துகின்றனா். இதனை தடுக்க வனத்துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு நாட்டுத் துப்பாக்கிகள், மான் இறைச்சி, கொம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனா். எனினும், மான்கள் வேட்டையாடப்படுவதும், நாட்டு துப்பாக்கி கலாச்சாரமும் தொடா்ந்து நீடிக்கிறது.

இந்த நிலையில், ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு பங்களாமேடு பகுதியில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினா் அப்பகுதியில் வீடுவீடாக சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒரு வீட்டில் வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினா், இதுதொ டா்பாக அதேபகுதியைச் சோ்ந்த அஜீத்குமாா்(23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.