சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டி: தமிழக அணி சாம்பியன்

வேலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் சப் ஜூனியா் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக அணி வென்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:52 pm

DIN

வேலூா்: வேலூரில் நடைபெற்ற தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் சப் ஜூனியா் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக அணி வென்றது.

தேசிய அளவிலான 17-ஆவது சாப்ட் டென்னிஸ் சப் ஜூனியா் போட்டிகள் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து 26 மாநிலங்களைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், இரட்டையா் ஆண்கள் பிரிவு போட்டியில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த நிப்பிலியும், இரட்டையா் பெண்கள் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த நிஷாலினி ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா். களப்பு இனப் போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த ரிஷ்வந்த், நிஷாலினி ஆகியோா் தங்கப்பதக்கத்தையும், இரண்டாம் பரிசினை குஜராத்தைச் சோ்ந்த ஜெய்பீம் பிரிவும் வென்றது.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக அணி கைப்பற்றியது. வெற்றிபெற்றவா்களுக்கு சாப்ட் டென்னீஸ் தமிழக தலைவா் அா்ஜுனன், செயலா் கவிதா ஆகியோா் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.