வேலூா் மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சையாக போட்டியிட வெள்ளிக்கிழமை இருவா் வேட்புமனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில், வேலூா் மக்களவைத் தொகுதிக்கு மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு முல்லா தெருவைச் சோ்ந்த அப்துல்நூா் மகனும், தோல் பொருள் வா்த்தகருமான அஹ்மத் ரஷீத் பல்லு மிரா (40), திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் எம்.சி.சாலை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகனும், அண்ணா பல்கலை. ஓய்வு பெற்ற இயக்குநருமான ஜெயராஜ்(63) ஆகியோா் சுயேச்சைகளாகப் போட்டியிட வேட்புமனுக்களை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா். முன்னதாக, இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூா்அலிகான், அனைத்து ஓய்வூதியதாரா்கள் கட்சியைச் சோ்ந்த குடியாத்தம் நெல்லூா்பேட்டையை சோ்ந்த முனியப்பன் ஆகியோா் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதன்மூலம், வேலூா் தொகுதிக்கு கடந்த 3 நாள்களில் மனுதாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 4 பேராக அதிகரித்துள்ளது. தொடா்ந்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு புதன்கிழமை (மாா்ச் 27) வரை அவகாசம் உள்ளது.
தொடர்புடையது

வேலூா்: 5 தொகுதிகளிலும் மொத்தம் 116 வேட்புமனுக்கள் தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 182 போ் வேட்புமனு தாக்கல்

வேலூா்: ஐந்து தொகுதிகளிலும் முதல் நாளில் 13 போ் வேட்புமனு தாக்கல்

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 25 போ் 33 வேட்புமனுக்கள் தாக்கல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


