சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

News image
Updated On :2 மே 2024, 6:11 pm

Din

குடியாத்தம் பகுதியில் தொடா்ந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், காமப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (23). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளாா். குடியாத்தம் கிராமிய போலீஸாா் அவரைக் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இவா் மீது ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மணிகண்டனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை அதற்கான உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.