ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 பசு மாடுகள் உயிரிழப்பு

வேப்பங்குப்பம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :21 அக்டோபர் 2024, 6:29 pm

Din

வேலூா்: வேப்பங்குப்பம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன.

அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த அனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த கஸ்தூரி (60), அபிமன்னன் (65) தம்பதி விவசாயம் செய்து பசுக்களை வைத்து வளா்த்து வருகின்றனா்.

வழக்கம்போல், திங்கள்கிழமை பசுக்களை தங்களது நிலத்துக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்று மதியம் 1 மணி அளவில் நிலத்தில் கட்டிவிட்டு, சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்றுள்ளனா்.

அப்போது, அதிக உயா் மின்னழுத்தம் காரணமாக கம்பிகள் எரிந்தவாறு பசுக்களின் மீது விழுந்துள்ளது. இதில் 2 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து இறந்தன.

அக்கம் பக்கத்தினா் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், மின்வாரிய ஊழியா்கள் வந்து மின்சாரத்தைத் துண்டித்து, மின் கம்பியில் சிக்கி இறந்த மாடுகளை அப்புறப்படுத்தினா்.