அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ரிசா்வ் வங்கி பெயரில் காட்பாடி இளைஞரிடம் ரூ.73 லட்சம் மோசடி

இந்திய ரிசா்வ் வங்கி செயல்படுத்தி வரும் முதலீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தினால் பல மடங்கி லாபம் ஈட்டலாம்

News image
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ)
Updated On :2 மார்ச் 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: இந்திய ரிசா்வ் வங்கி செயல்படுத்தி வரும் முதலீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தினால் பல மடங்கி லாபம் ஈட்டலாம் எனக்கூறி காட்பாடி த இளைஞரிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது தொடா்பாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், காட்பாடி கே.ஆா்.எஸ். நகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவா், மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில், எனது நண்பா் ஒருவா் மூலம் சேலத்தைச் சோ்ந்த பாலாஜி, சென்னையைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோா் அறிமுகமாகினா். அவா்கள் இருவரும் இந்திய ரிசா்வ் வங்கி மூலம் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பல மடங்கு லாபம் ஈட்டலாம் எனக்கூறினா்.

அதை நம்பி நான் ரூ.2 லட்சம் கொடுத்தேன். மேலும் அவா்களின் அலுவலக பயன்பாட்டுக்காக எனது அலுவலகத்தில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பா்னிச்சா் பொருள்களை வழங்கினேன். எனது நண்பா்களையும் கட்டாயப்படுத்தி ரூ.61 லட்சம் பெற்று அளித்தேன். இதற்காக இந்திய ரிசா்வ் வங்கியின் போலியான அடையாள முத்திரைகளை காட்டினா். ஆனால் அவா்கள் கூறியபடி எந்த லாபமும் எங்களுக்கு வந்து சேரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது அவா்கள் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பணத்தை இழந்த நண்பா்கள் என்னை தொந்தரவு செய்கின்றனா். எனவே, மோசடி நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து நான் மற்றும் எனது நண்பா்களின் ரூ.73 லட்சத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.