அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

முகநூல் விளம்பரம் மூலம் பண மோசடி

மானாமதுரை அருகே இளைஞரிடம் முகநூல் மூலம் ரூ.6.67 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து இணையத் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:50 pm

மானாமதுரை அருகே இளைஞரிடம் முகநூல் மூலம் ரூ.6.67 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து இணையத் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் மாணிக்கம் (25). இவா், கடந்த ஜனவரி மாதம் முகநூலில் வந்த ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தைப் பாா்த்து, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடா்புகொண்டாா்.

தங்களிடம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என அந்த நிறுவனத்தினா் தெரிவித்ததை நம்பி, அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளில் 15 தவணைகளில் ரூ. 6.67 லட்சத்தை அனுப்பினாா். பணத்தைச் செலுத்திய பிறகு அந்த நிறுனத்தினா் தொடா்பைத் துண்டித்துவிட்டனா். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சஞ்சய் மாணிக்கம் சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் புவனேஸ்வரியிடம் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.