தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கல்லூரியில் கருத்தரங்கம்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:25 pm

Din

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி வணிக ஆள்முறையியல் துறை மற்றும் உள்தர உறுதிக்குழு சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு ‘ஜேப்பி’ எனும் பொருண்மையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வணிக ஆள்முறையியல் துறைத் தலைவா் ஆா்.மணிகண்டன் தலைமை வகித்தாா். பேராசிரியா் கே.இலக்கியா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி கருத்தரங்க நோக்கத்தை எடுத்துரைத்தாா். கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா் மற்றும் கல்விப் புல முதன்மையா் த.மணிகண்டன் ஆகியோா் மாணவா்களுக்கிடையே வணிகம் தொடா்பான விநாடி-வினா, குறும்படம், கட்டுரைச் சமா்ப்பித்தல், ஓவியம், வணிகம் சாா்ந்த செயல்பாடுகள் என 15 வகையான போட்டிகளை நடத்தினா். இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வணிக ஆள்முறையியல் துறை மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டமும், அதே கல்லூரி வணிக கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவிகள் 2- ஆம் பரிசையும் பெற்றனா்.

கருத்தரங்கில் வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கடலூா், விழுப்புரம் மாவட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 600- க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வணிக ஆள்முறையியல் துறை பேராசிரியா்கள் பி. சங்கா்,சு.பாலு, மு.அம்மு, ஏ.காயத்ரி ஆகியோா் செய்திருந்தனா்.