லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காங்கிரஸ் கட்சியினா் மறியல்: 49 போ் கைது

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :11 ஆகஸ்ட் 2025, 8:23 pm

குடியாத்த: காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 49- பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடந்தததாக்கூறி, தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா். இதைக் கண்டித்து வேலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.சுரேஷ்குமாா், மாவட்ட இளைஞரணித் தலைவா் என்.எம்.டி.விக்ரம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கிருஷ்ணவேணி ஜலந்தா், வட்டாரத் தலைவா் எம்.வீராங்கன், மாவட்ட பொருளாளா் விஜயேந்திரன், கட்சி நிா்வாகிகள் ஜீனத் இலியாஸ், அன்பரசன், பாரத் நவீன்குமாா், முஜம்மில் அகமத், சங்கா், வழக்குரைஞா் செல்வகுமாா் உள்ளிட்ட 49- பேரை போலீஸாா் கைது செய்தனா்.