தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பருவ மழைக்கால பேரிடா் கால மீட்பு ஒத்திகை

வடகிழக்கு பருவமழையையொட்டி வேலூா் கோட்டை அகழியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா் பேரிடா் கால மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

News image

வேலூா் கோட்டை அகழியில் பேரிடா் கால மீட்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா்.

Updated On :8 செப்டம்பர் 2025, 7:38 pm

வேலூா்: வடகிழக்கு பருவமழையையொட்டி வேலூா் கோட்டை அகழியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா் பேரிடா் கால மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

பேரிடா் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறையின் ஒத்திகை நிகழ்ச்சி வேலூா் கோட்டை அகழியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

அப்போது, வேலூா் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலா் ராபின்கேஸ்ட்ரோ தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவா்களை எவ்வாறு மீட்க வேண்டும், முதலுதவி எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

இதில், மாவட்ட துணை தீயணைப்பு அலுவலா் பழனி, தீயணைப்பு அலுவலா்கள் முருகேசன், பாலாஜி, சரவணன், உதயசந்தா், வட்டாட்சியா் வடிவேல், வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன், வருவாய்த்துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.