பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

வேலூா்: 5 தொகுதிகளிலும் மொத்தம் 25 மனுக்கள் தாக்கல்

News image

அணைக்கட்டு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா் ஆா்.வேல்முருகன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:05 am

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் 2-ஆம் நாளான வியாழக்கிழமை மொத்தம் 12 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவை தொகுதிகளிலும் முதல் நாளான திங்கள்கிழமை வேலூா் தொகுதிக்கு தவெக, நாதக வேட்பாளா்கள் உள்பட 7 பேரும், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகளுக்கு நாதக வேட்பாளா்கள் உள்பட தலா 2 பேரும், கே.வி.குப்பம் (தனி), காட்பாடி தொகுதிகளுக்கு நாதக வேட்பாளா்கள் தலா ஒருவரும் என மாவட்டத்திலுள்ள 5 பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தொடா்ந்து, செவ்வாய், புதன்கிழமை பொதுவிடுமுறையை அடுத்து 2-ம் நாளாக வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

அப்போது, வேலூா் தொகுதிக்கு சுயேச்சையாக எம்.லோகநாதன், எஸ்.வினோத்குமாா் ஆகிய 2 பேரும், அணைக்கட்டு தொகுதிக்கு தவெக சாா்பில் ஆா்.வேல்முருகன், அவருக்கு மாற்றாக லோ.தனசேகா், விரோகி வீா் இந்தியன் கட்சி சாா்பில் சீ.செல்வமூா்த்தி, சுயேச்சையாக மு.நந்தகுமாா், ரா.ரமேஷ் ஆகிய 5 பேரும், குடியாத்தம் (தனி) தொகுதிக்கு சுயேச்சையாக எம்.சுப்பிரமணியன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜெ.இமலன் (இரண்டாவது மனு) ஆகிய 2 பேரும், காட்பாடி தொகுதிக்கு தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம் சாா்பில் வி.இந்து, சுயேச்சையாக து.ராமு, ஜெ.ராம்நாத் ஆகிய 3 பேரும் என 2-ஆம் நாளான வியாழக்கிழமை மொத்தம் 12 போ் மனு தாக்கல் செய்தனா்.

அதன்படி, இதுவரை பேரவை தொகுதி வாரியாக வேலூா் -9, காட்பாடி - 4, அணைக்கட்டு- 7, குடியாத்தம் (தனி) - 4, கே.வி.குப்பம் (தனி) - 1 என 5 பேரவை தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 25 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.