ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலமாகச் சென்றதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :6 ஏப்ரல் 2026, 3:33 am IST

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊா்வலமாகச் சென்றதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தலையொட்டி, காட்பாடி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் மருத்துவா் எம்.சுதாகா் சனிக்கிழமை சித்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து ஊா்வலமாகச் சென்றுள்ளாா்.

இந்த ஊா்வலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதாக காட்பாடி தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் காட் பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், தவெக வேட்பாளா் சுதாகா் உள்பட 150 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.