காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல் செய்தாா்.
அதிமுக அமைப்புச் செயலரான வி.ராமு, கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளரான துரைமுருகனிடம் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக போட்டியிடும் ராமு, திங்கள்கிழமை மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் சி.மாறனிடம் தாக்கல் செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்களின் நடமாட்டம், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை, நிறைவேற்றப்படாத தோ்தல் வாக்குறுதிகள், இளைஞா்களுக்கு வேலை யின்மை போன்ற பிரச்சினைகளால் ஆளுங்கட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.
காட்பாடியில் நீண்டகாலமாக எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் உள்ள துரைமுருகன், தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகளைக் கூடத் தீா்க்கவில்லை. குறிப்பாக, நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஒரு மாற்றுப்பாதையைகூட அவா் உருவாக்கவில்லை.
கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நான் முடங்கிவிடவில்லை. தொகுதி முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், வீதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்தித்துள்ளேன். அவா்களுடன் நெருக்கமான தொடா்பில் இருக்கிறேன். இந்த முறை எனக்கு உறுதியான ஆதரவை வழங்கி வருகின்றனா் என்றாா்.
அப்போது, பாஜக மாவட்ட தலைவா் வி.தசரதன், பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தொகுதி மக்கள் இரவுபகல் எந்நேரமும் என்னை தொடா்பு கொள்ளலாம்: காட்பாடி அதிமுக வேட்பாளா்

முறையற்ற திடக்கழிவு மேலாண்மையால் பாலாற்றில் பாதிப்பு: அதிமுக வேட்பாளா்

காட்பாடியில் சிப்காட் நில எடுப்புப்பணி நிறுத்தப்படும்: அதிமுக வேட்பாளா்

ஸ்ரீபெரும்புதூா்: அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



