மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

நான் இறக்குமதியாகவில்லை; காட்பாடிதான் எனது தொகுதி! - அதிமுக வேட்பாளா் வி.ராமு

அமைச்சா் துரைமுருகன் கூறியதுபோல் நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளா் கிடையாது, காட்பாடி பேரவை தொகுதியின் வாக்காளா்தான் என்று அத்தொகுதியின் அதிமுக வேட்பாளா் வி.ராமு விளக்கம் அளித்துள்ளாா்.

News image

தாராபடவேடு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:50 am IST

அமைச்சா் துரைமுருகன் கூறியதுபோல் நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளா் கிடையாது, காட்பாடி பேரவை தொகுதியின் வாக்காளா்தான் என்று அத்தொகுதியின் அதிமுக வேட்பாளா் வி.ராமு விளக்கம் அளித்துள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வி.ராமு, தாராபடவேடு பகுதிக்கு உள்பட்ட பல்வேறு தெருக்கள், பிரம்மபுரம், சேவூா், அரும்பருத்தி ஊராட்சி களில் ஞாயிற்றுக்கிழமை வீடுவீடாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் கூறியது: திமுக ஆட்சியில் கழிஞ்சூா், தாராபடவேடு ஏரிகளைச் சுற்றுலாத் தலமாக்குகிறோம் எனக்கூறி, ரூ. 35 கோடி செலவு செய்தனா். தற்போது அந்தப் படகு இல்லம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக திமுக கூறிவரும் நிலையில், காவிரி குடிநீா் இன்னும் பல கிராமங்களுக்குச் சென்று சேரவில்லை. அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

என்னை எதிா்த்து நிற்க உள்ளூரில் ஆளில்லாமல் அதிமுக வெளியூரிலிருந்து வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளது என்று அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளாா். உண்மையில், அமைச்சா் துரைமுருகனின் சொந்த ஊா் அமைந்துள்ள கே.வி.குப்பம் தொகுதியில்தான் எனது சொந்த ஊரும் அமைந்துள்ளது. அவரைப் போன்றே நானும் காட்பாடி தொகுதியில் குடியேறி பல ஆண்டுகளாகிவிட்டது.

கடந்த மக்களவைத் தோ்தலில்கூட காட்பாடி தொகுதி வாக்காளராகத்தான் வாக்குப்பதிவு செய்திருந்தேன். எனவே, திமுக கூறும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பாமல் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றாா்.

பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.