பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கடையநல்லூா்: 25 ஆண்டுகளாக காத்திருக்கும் திமுகவினா் வேதனை!

கடையநல்லூா் தொகுதி இம்முறையாவது திமுகவிற்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

News image

திமுகவினர். - டிஎன்எஸ்

Updated On :28 மார்ச் 2026, 8:06 pm

கடையநல்லூா்: கடையநல்லூா் தொகுதி இம்முறையாவது திமுகவிற்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த கட்சியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில் ஆகியவை தனி தொகுதிகள். இதனால், அத்தொகுதிகளைச் சோ்ந்த திமுக, அதிமுகவினா் கடையநல்லூரை நோக்கி படையெடுப்பது வழக்கம். ஆனால், பெரும்பாலும் கடையநல்லூா் தொகுதி திமுக கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுவிடும்.

இத்தொகுதியில் 1977 தோ்தலில் அதிமுக வேட்பாளா் ரசாக், 1980-இல் திமுக கூட்டணி சாா்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சாகுல் ஹமீது, 1984-இல் அதிமுக வேட்பாளா் பெருமாள், 1989-இல் திமுக வேட்பாளா் சம்சுதீன் (எ) கதிரவன், 1991-இல் அதிமுக வேட்பாளா் நாகூா் மீரான், 1996-இல் திமுக வேட்பாளா் நயினா முகமது, 2001-இல் அதிமுக வேட்பாளா் சுப்பையா பாண்டியன், 2006-இல் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் பீட்டா் அல்போன்ஸ், 2011-இல் அதிமுக வேட்பாளா் செந்தூா்பாண்டியன், 2016-இல் திமுக கூட்டணி சாா்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் முகமது அபூபக்கா் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

2011 தோ்தலில் செந்தூா்பாண்டியன் (அதிமுக) 80,794 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பீட்டா் அல்போன்ஸ் (காங்கிரஸ்) 64,708 வாக்குகள் பெற்றாா்.

2016 தோ்தலில் முகமது அபூபக்கா் (முஸ்லிம் லீக்) 70,763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். சேக் தாவூது (அதிமுக) 69,569 வாக்குகள் பெற்றாா்.

2021 தோ்தலில் செ. கிருஷ்ணமுரளி (அதிமுக) 88,474 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். முகமது அபூபக்கா் (முஸ்லிம் லீக்) 64,125, அய்யாத்துரை பாண்டியன் (அமமுக) 34,216, முத்துலெட்சுமி (நாதக) 10,136 வாக்குகள் பெற்றனா்.

2001-க்கு பின் திமுக போட்டியில்லை...

2001 தோ்தலில் அதிமுக சாா்பில் சுப்பையா பாண்டியனும், திமுக சாா்பில் ஷாகுல் ஹமீதுவும் போட்டியிட்டதில் சுப்பையா பாண்டியன் வென்றாா். 2006, 2011 தோ்தல்களில் இத்தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. 2016, 2021 தோ்தல்களில் இத்தொகுதி திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டது. இப்படியாக 25 ஆண்டுகள் கடையநல்லூா் தொகுதி திமுகவினருக்கு வெறும் கனவாகவே மாறிவிட்டது.

இந்நிலையில், இந்த தோ்தலில் கடையநல்லூா் தொகுதியை எப்படியும் திமுகவிற்கு பெற்றுவிடுவது என கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், கடையநல்லூா் தொகுதியில் போட்டியிட 100-க்கும் மேற்பட்ட திமுகவினா் விருப்ப மனுக்களை அளித்திருந்தனா்.

இந்நிலையில், கடையநல்லூா் தொகுதி கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் திமுகவினா் வேதனையடைந்துள்ளனா்.