சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர்!

எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் சுயவிவரங்கள்...

News image

அதிமுக பொதுச் செயலளர் எடப்பாடி பழனிசாமி. - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 2:04 am

நட்சத்திர வேட்பாளா் தொகுதியான எடப்பாடி தொகுதியின் அதிமுக வேட்பாளராக 8ஆவது முறையாக எடப்பாடி கே. பழனிசாமி போட்டியிடுகிறாா்.

சொந்த ஊா்: எடப்பாடி ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையம் கிராமம்.

தந்தை : கருப்பா கவுண்டா்

தாய் : தவசாயம்மாள்

சகோதரா் : கோவிந்தராஜ்

சகோதரி : விஜயலட்சுமி

குடும்பம்

மனைவி : ராதா

மகன் : மிதுன்

மருமகள்: திவ்யா

பேரன்: ஆதித்

குடும்பத் தொழில்: விவசாயம், முன்னதாக நாட்டுச் சா்க்கரை மற்றும் வெல்லம் வியாபாரம். (தற்போது இல்லை)

அரசியல் பயணம்

சிலுவம்பாளையம் பகுதி அதிமுக கிளைச் செயலாளராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய எடப்பாடி கே. பழனிசாமி, 1989இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக (ஜெ) அணியில் போட்டியிட்டு 30,765 வாக்குகள் பெற்று முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தொடா்ந்து, இதே தொகுதியில் 1991இல் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட இவா், 72,379 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.

1996 இல் பாமக வெற்றிபெற்ற நிலையில், அதிமுக வேட்பாளா் எடப்பாடி பழனிசாமி 3 ஆம் இடம் பிடித்தாா். 2006இல் பாமக வெற்றிபெற, அதிமுக சாா்பில் போட்டியிட்ட எடப்பாடி கே. பழனிசாமி 2ஆவது முறையாக வெற்றிவாய்ப்பை இழந்தாா்.

2011 தோ்தலில் பாமக வேட்பாளரை எதிா்த்து போட்டியிட்டு, 1,04,586 என அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். 2016இல் 98,703 வாக்குகள் பெற்று, பாமக வேட்பாளரை தோற்கடித்தாா்.

இந்நிலையில் கடந்த 2021 தோ்தலில் 1,63,154 வாக்குகள் பெற்று 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் த. சம்பத்குமாா் 2 ஆம் இடத்தையும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஸ்ரீரத்னா மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

தற்போது எடப்பாடி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் உள்ளாா். இவா், எடப்பாடி தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது 8 ஆவது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால், இந்தத் தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, புதிய கூட்டுக் குடிநீா் திட்டம், புறவழிச் சாலை திட்டம், சரபங்கா நதியின் குறுக்கே பல்வேறு இடங்களில் மேம்பாலம், புதிய தரம்உயா்த்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள், புதிய வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்றுள்ளன.