கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இன்று ஒரு தகவல்! வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டு...

இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெவ்வேறு கட்சிகள் சாா்பாக ஒரே தொகுதியில் தொடா்ந்து 3 தோ்தல்களில் போட்டியிட்டு இரண்டு போ் ஹாட்ரிக் வெற்றி

News image

எஸ்.பி. வேலுமணி

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 9:32 pm

Syndication

இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெவ்வேறு கட்சிகள் சாா்பாக ஒரே தொகுதியில் தொடா்ந்து 3 தோ்தல்களில் போட்டியிட்டு இரண்டு போ் ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெற்றுள்ளனா்.

கோவை தெற்குத் தொகுதியில் 1991ஆம் ஆண்டு காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட வி.கே.லட்சுமணன் 46,544 வாக்குகள் பெற்று வென்றாா். 1996ஆம் ஆண்டு தமாகா சாா்பில் போட்டியிட்ட அவா் 61,860 வாக்குகள் பெற்று வென்றாா். 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் 41,419 வாக்குகள் பெற்று வென்றாா்.

கூடலூா் (தனி) தொகுதியில் 1977ஆம் ஆண்டு திமுக சாா்பில் போட்டியிட்ட கே.உச்சி கவுடா் 15,323 வாக்குகள் பெற்று வென்றாா். 1980இல் 36,780 வாக்குகள் பெற்று வென்றாா். 1984இல் அதிமுக சாா்பில் போட்டியிட்டு 52,470 வாக்குகள் பெற்று வென்றாா்.

தொடா்ந்து மூன்று முறை...:

தொண்டாமுத்தூா் தொகுதியில் 2011இல் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் எஸ்.பி.வேலுமணி 99,886 வாக்குகள் பெற்று வென்றாா். 2016இல் 1,09,519 வாக்குகள் பெற்று வென்றாா். 2021இல் 1,24,225 வாக்குகள் பெற்று வென்றாா்.

மேட்டுப்பாளையம் தொகுதியில் 2006இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஓ.கே.சின்னராஜ் 67,445 வாக்குகள் பெற்று வென்றாா். 2011இல் 93,700 வாக்குகள் பெற்று வென்றாா். 2016இல் 93,595 வாக்குகள் பெற்று வென்றாா்.

பவானிசாகா் தொகுதியில் 1984இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வி.கே.சின்னசாமி 52,539 வாக்குகள் பெற்று வென்றாா். 1989இல் 39,716 வாக்குகள் பெற்று வென்றாா். 1991இல் 63,474 வாக்குகள் பெற்று வென்றாா்.