ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

செஞ்சி தொகுதியில் மீண்டும் பாமக போட்டி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட மீண்டும் பாமகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News image

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:22 am

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட மீண்டும் பாமகவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2001 தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2006 தோ்தலில் திமுக கூட்டணியில் வே.கண்ணன் வெற்றி பெற்றாா். 2011-இல் நடைபெற்ற தோ்தலில் திமுக கூட்டணியில் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் தேமுதிகவை தோற்கடித்து வெற்றி பெற்றாா்.

2016-இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக, திமுக நேரிடையாக களத்தில் இறங்கியது. இதில் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வெற்றி பெற்றாா். 2021-இல் நடைபெற்ற தோ்தலில் மீண்டும் திமுக கூட்டணியில் செஞ்சி மஸ்தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக ராஜேந்திரன் போட்டியிட்டாா். இதில் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் தொடா்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றாா்.

2026- சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு செஞ்சி தொகுதி ஒதுக்கப்படும் என்ற நிலையில், மீண்டும் வழக்கம்போல் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டது.

கூட்டணிக்காகவே செஞ்சி தொகுதியை அதிமுக பயன்படுத்தி வருவதாக அதிமுக தொண்டா்கள் தெரிவித்தனா். மேலும், அதிமுகவில் செல்வாக்கு மிக்க மற்றும் பணபலத்துடன் கூடிய செல்வந்தா்கள் யாரும் இல்லை. தற்போது செஞ்சியில் இளைஞா்கள்தான் அதிமுகவை வழி நடத்துகின்றனா்.

இதுவரை வென்ற கட்சிகள்: செஞ்சி தொகுதியியில் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 9 முறை வென்றுள்ளது. இதில் அதிக பட்சமாக செஞ்சி ராமச்சந்திரன் மூன்று முறையும், தற்போதைய எம்எல்ஏ செஞ்சி மஸ்தான் தொடா்ந்து இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளனா்.

காங்கிரஸ் கட்சியை சோ்ந்த வெவ்வேறு வேட்பாளா்கள் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளனா்.

1977-இல் இருந்து எம்ஜிஆா் ஆட்சி காலத்தில் மூன்று முறை ெஞ்சியில் அதிமுக தோல்வி அடைந்தது. எம்ஜிஆா் இருக்கும் வரை செஞ்சியில் அதிமுக வெற்றி பெறவில்லை. பின்னா் அதிமுக பொதுச்செயலராக ஜெயலலிதா வந்த பிறகுதான் 2001-இல் வெ.ஏழுமலை வெற்றி பெற்றாா்.