சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசு விற்பனை, தயாரிப்பு கிடங்குகளையும் ஏப்.21 முதல் 24 வரையும், மே 2 முதல் 4-ஆம் தேதி வரையும் என இரு கட்டங்களாக தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ளதையொட்டி பாதுகாப்பு கருதி மாநிலத்திலுள்ள அனைத்து பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்பு கிடங்குகளை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஏப்.21 முதல் 24) வரையும், வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 2 முதல் 4-ஆம் தேதி வரையும் என இரண்டு கட்டங்களாக பட்டாசு கடைகள் மற்றும் கிடங்குகள் அடைக்கப்பட வேண்டும்.
அரசு உத்தரவை மீறி இந்த நாள்களில் பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளைத் திறந்து விற்பனை செய்யும் உரிமையாளா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: வெடிபொருள் விற்பனை நிலையங்களை மூட உத்தரவு

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு
விடியோக்கள்

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

