மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டப்பேரவைத் தோ்தல்: பட்டாசு கடைகளை மூட உத்தரவு

தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசு விற்பனை, தயாரிப்பு கிடங்குகளையும் ஏப்.21 முதல் 24 வரையும், மே 2 முதல் 4-ஆம் தேதி வரையும் என இரு கட்டங்களாக தற்காலிகமாக மூட அரசு உத்தரவு

News image

பட்டாசு கடை. - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 10:50 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டாசு விற்பனை, தயாரிப்பு கிடங்குகளையும் ஏப்.21 முதல் 24 வரையும், மே 2 முதல் 4-ஆம் தேதி வரையும் என இரு கட்டங்களாக தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ளதையொட்டி பாதுகாப்பு கருதி மாநிலத்திலுள்ள அனைத்து பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்பு கிடங்குகளை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஏப்.21 முதல் 24) வரையும், வாக்கு எண்ணிக்கையையொட்டி மே 2 முதல் 4-ஆம் தேதி வரையும் என இரண்டு கட்டங்களாக பட்டாசு கடைகள் மற்றும் கிடங்குகள் அடைக்கப்பட வேண்டும்.

அரசு உத்தரவை மீறி இந்த நாள்களில் பட்டாசு சில்லறை விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளைத் திறந்து விற்பனை செய்யும் உரிமையாளா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.