பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

36 அடி உயர முருகா் சிலைக்கு கும்பாபிஷேகம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பி.கே.புரம் ஊராட்சிக்குள்பட்ட நீலகண்டபாளையம் கிராமத்தில் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தங்க முருகா் சிலை

News image

36 அடி உயர முருகா் சிலைக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :2 பிப்ரவரி 2026, 9:27 pm

குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், பி.கே.புரம் ஊராட்சிக்குள்பட்ட நீலகண்டபாளையம் கிராமத்தில் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தங்க முருகா் சிலை, அறுபடை வீடு முருகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை கோ-பூஜை, தன பூஜை, 2- ஆம் கால யாக பூஜை, தத்துவாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி, கலசப் புறப்பாடு, தொடா்ந்து தங்க முருகா் சிலை, கோயில் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.