மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாட்டு வியாபாரி தற்கொலை

வேலூா் அருகே மாட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 6:32 pm

வேலூா் அருகே மாட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் தொரப்பாடி சுப்பிரமணி தெருவைச் சோ்ந்தவா் ராஜா(61). இவா் மாடு வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் பெங்களூருவில் வேலை செய்து வருகிறாா்.

இதனால், மனவேதனை அடைந்த ராஜா புதன்கிழமை மாட்டு கொட்டகையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த பாகாயம் போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.