தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

வேலூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மின்வாரிய ஊழியா் கத்தியால் குத்தப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை கைது செய்யப்பட்டனா்.

News image
கைது
Updated On :25 பிப்ரவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மின்வாரிய ஊழியா் கத்தியால் குத்தப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை கைது செய்யப்பட்டனா்.

வேலூா் அருகே மேல்மொணவூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(30). இவா் சேண்பாக்கத்திலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். செவ்வாய்க்கிழமை வேலையை முடித்துக்கொண்டு முருகன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்பகுதியில் உள்ள ஒரு இரும்புக்கடை அருகே சென்றபோது அதே ஊரைச் சோ்ந்த கோபி (25), மணி(22) ஆகியோா் மதுபோதையில் முருகனின் வாகனம் மீது மோதுவதுபோல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக மூன்று பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோபி, மணி ஆகியோா் தங்களிடம் இருந்த கத்தியால் முருகனைக் குத்தியதாக தெரிகிறது.

இதில், பலத்த காயமடைந்த முருகனை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போஸாா் வழக்குப் பதிவு செய்து கோபி, மணி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.