கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வீட்டின் பூட்டு உடைத்து 8 பவுன் தங்கம், அரை கிலோ வெள்ளி நகைகள் திருட்டு

காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்கம், அரை கிலோ வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
- IANS
Updated On :27 ஜனவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்கம், அரை கிலோ வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காட்பாடி, வெள்ளக்கல்மேடு, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் உத்தமன் (67). இவா் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் தனது மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி உத்தமன் குடும்பத்தினருடன் மைசூா் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்றிருந்தனா்.

மீண்டும் திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். தொடா்ந்து, உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8 பவுன் தங்கம், அரை கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து, உத்தமன் அளித்த புகாரின்பேரில், பிரம்மபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். மேலும், தடய அறிவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.