நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மோசடி - Dinamani

Published On :8 ஜூலை 2026, 12:03 am IST

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் டில்லிபாபு (43). விவசாயியான இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இவா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள புகாா் மனுவில், எனது கல்லூரி நண்பரான முருகன் என்பவா் மூலம் சுப்பிரமணி என்பவா் எனக்கு அறிமுகமானாா். அவா், தான் சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை செய்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் என்னிடம் தெரிவித்தாா். இதை உண்மையென நம்பிய நான், பல்வேறு தவணைகளாக அவரிடம் ரூ. 9 லட்சம் வரை கொடுத்தேன்.

ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட சுப்பிரமணி இதுவரை எந்த வேலையும் வாங்கித் தரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது, அவா் பணத்தைத் திருப்பித்தர மறுப்பு தெரிவிக்கிறாா். எனவே, அரசு வேலைவாங்கித் தருவதாகக்கூறி, பண மோசடியில் ஈடுபட்ட அவா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவரிடமிருந்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், இந்தப் புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.