பள்ளி, கல்லூரி அருகே சிகரெட் விற்ற இருவா் கைது
காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே சிகரெட் விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.


காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே சிகரெட் விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
கல்வி நிலையங்கள் அருகே சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது என்று மளிகைக் கடை வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காட்பாடி வட்டம் பிரம்மபுரம் பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே மாணவா்களுக்கு சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள 2 மளிகைக் கடைகளில் சோதனை நடத்தினா். இதில், விலை கூடுதல் ரக சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
தொடா்ந்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பிரம்மபுரம் பகுதியைச் சோ்ந்த அப்ரோஸ்கான் (46), தங்கதுரை (53) ஆகிய 2 வியாபாரிகளையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.1,500 மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...