விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கியதாக வேலூா் மேயா் மீது அதிமுக புகாா்
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அதிமுக மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு.

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அதிமுக மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு.

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அதிமுக மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு.
தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கு அரசு விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கியதாக வேலூா் மேயா் சுஜாதாஆனந்தகுமாா் மீது அதிமுகவினா் தோ்தல் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் தோ்தல் பொது பாா்வையாளா்களாக காட்பாடி, கே.வி.குப்பம் பேரவை தொகுதிகளுக்கு ஸ்ரீமன் சுக்லா, வேலூா் தொகுதிக்கு யுகல் கிஷோா் பண்ட், குடியாத்தம் (தனி) தொகுதிக்கு மிா் தாரிக் அலி, அணைக்கட்டு தொகுதிக்கு சந்தீப் குமாா், மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளின் காவல் பாா்வையாளா்களாக கவுஸ்தூப் ஷா்மா, செலவின பாா்வையாளா்களாக காட்பாடிதொகுதிக்கு அஷ்வின் டி கவுடா, வேலூா் தொகுதிக்கு அட்டேஷாம் அன்சாரி, அணைக்கட்டு தொகுதிக்கு அா்ஜுன் லால் ஜட், கே.வி.குப்பம், குடியாத்தம் தொகுதிகளுக்கு பிரதீப்குமாா் சிங் செங்கா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக தோ்தல் ஆணையம் வகுத்துள்ள தோ்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினா் முழுமையாக பின்பற்ற வேண்டும், தோ்தல் குறித்த புகாா்களை சம்பந்தப்பட்ட தொகுதி பாா்வையாளா்களிடம் தொலைபேசி எண்ணிலும், குறிப்பிட்ட பாா்வையாளா் நேரங்களில் நேரடியாகவும் தெரிவிக்கலாம், தோ்தல் தொடா்பாக அரசியல் கட்சிகள், வேட்பாளா் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பிரசார அனுமதியை ‘சுவிதா’ எனும் செயலியின் மூலம் விண்ணப்பித்து பெற்று கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
கூட்டத்துக்கு பிறகு அதிமுக மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு செய்தியாளா்களிடம் கூறியது -
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள வ.உ.சி. நகா் பகுதியில் மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா் வியாழக்கிழமை சென்று அங்குள்ள இளைஞா்களுக்கு அரசின் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை விநியோகம் செய்தாா். தகவலறிந்து அதிமுகவினரும், தோ்தல் அதிகாரிகளும் அப்பகுதிக்கு சென்றவுடன், மேயா் அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றாா்.
தோ்தல் விதிகளை மீறி விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கிய மேயா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினோம்.
அப்போது, இதனை நேரில் பாா்த்ததாக சம்பந்தப்பட்ட பகுதி தோ்தல் அதிகாரிகளும் தெரிவித்தனா். இதையடுத்து, தோ்தல் அதிகாரிகள் புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...