ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

குடியாத்தத்தில் ரூ.10.35 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்டசோதனையில் இரு வேறு இடங்களில் ரூ.10.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

குடியாத்தம் தொகுதி தோ்தல் அலுவலா் எஸ்.சுபலட்சுமியிடம் பணத்தை ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :22 மார்ச் 2026, 10:20 pm

குடியாத்தம் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்டசோதனையில் இரு வேறு இடங்களில் ரூ.10.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை லட்சுமணாபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் ஆவணங்கள் இன்றி ரூ.6.85 லட்சம் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், போ்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் சோதனையில் கா்நாடக மாநிலத்துக்குச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது, பெங்களூரைச்சோ்ந்த ப்ரீத்திபாய், ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.3.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா். 2- இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10.35- லட்சம் தோ்தல் அலுவலா் எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.