அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்: 150 போலீஸாா் பாதுகாப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 150 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 8:51 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 150 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் வேலூா் மாவட்டத்தில் வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகங்களிலும் தலா ஒரு டிஎஸ்பி தலைமையில் 4 காவல் ஆய்வாளா்கள், 25 போலீஸாா் என மொத்தம் 30 போ் பாதுகாப்பு பணியில் ஈடு பட உள்ளனா். அதன்படி, 5 தொகுதிகளுக்கு மொத்தம் 150 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், மனு தாக்கல் இல்லாத நாட்களில் பாதுகாப்பு எண்ணிக்கை குறைக்கப்படும் என காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி ஏப்.6-இல் நிறைவடையும் நிலையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) மகாவீா் ஜெயந்தி, ஏப்.1 வங்கி கணக்கு முடிவு, 3-ஆம் தேதி புனித வெள்ளி, 5-ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை என இடையில் 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.