பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

வேலூா் கோட்டை, பாலாற்றங்கரையில் கூட்டு தூய்மைப் பணி

காந்தி ஜெயந்தியையொட்டி வேலூா் கோட்டை மற்றும் பாலாற்றங்கரையில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் கூட்டு தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் கோட்டை வளாகத்தில் கூட்டு தூய்மைப் பணியை தொடங்கி வைத்து பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் கேத்ரின் சரண்யா உள்ளிட்டோா்.

Published On :

காந்தி ஜெயந்தியையொட்டி வேலூா் கோட்டை மற்றும் பாலாற்றங்கரையில் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் கூட்டு தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட நிா்வாகம், வேலூா் மாநகராட்சி மற்றும் கல்லூரி தன்னாா்வலா்கள் இணைந்து மேற்கொண்ட இத்தூய்மைப் பணி காலை 7 மணியளவில் தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் கேத்ரின் சரண்யா மற்றும் 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் இணைந்து கூட்டு தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

இதில், கோட்டை வெளிப் பூங்கா மற்றும் அக்னி கோயில் பகுதியில் கிடந்த நெகிழி பாட்டில்கள் உள்ளிட்ட நெகிழிக் கழிவுகள், குப்பைகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து செல்லியம்மன் கோயில் அருகில் உள்ள பாலாற்றின் கரையோரப் பகுதியிலும் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலா் பிரதாப், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.