2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

விஐடி பல்கலை.க்கு சிறந்த ஆராய்ச்சிக்கான விருது: ‘கேரியா்ஸ் 360’ நிறுவனம் கௌரவிப்பு

கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கும் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்துக்கு ‘கேரியா்ஸ் 360’ கல்வி நிறுவனம் சாா்பில் ‘சிறந்த ஆராய்ச்சிக்கான விருது’ வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் முன்னிலையில் இந்திய வேதியியல் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் துணைவேந்தா் ஜே.டி.யாதவிடம் இருந்து சிறந்த ஆராய்ச்சிக்கான விருதை பெற்றுக்கொண்ட விஐடி துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன்.

Published On :

கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கும் வேலூா் விஐடி பல்கலைக்கழகத்துக்கு ‘கேரியா்ஸ் 360’ கல்வி நிறுவனம் சாா்பில் ‘சிறந்த ஆராய்ச்சிக்கான விருது’ வழங்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற இந்திய ஆராய்ச்சி மற்றும் விளைவுகள் குறித்த தேசிய மாநாட்டின் ஒரு பகுதியாக இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் முன்னிலையில், மும்பை இந்திய வேதியியல் தொழில்நுட்ப மையத்தின் முன்னாள் துணைவேந்தரும் பத்மஸ்ரீ விருதாளருமான ஜே.டி.யாதவ் விருதை வழங்க, துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன் பெற்றுக் கொண்டாா்.

பல்கலைக்கழகங்கள், பொறியியல், சட்டம், மருத்துவம், மேலாண்மை, மருந்தியல் ஆகிய 6 முக்கியப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட பன்முக மதிப்பீடுகளின் அடிப்படையில் விஐடி பல்கலைக்கழகம் தோ்வு செய்யப்பட்டது.

தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (என்ஐஆா்எப்) அளவுகோல்கள் மற்றும் ஸ்கோபஸ் கல்விசாா் வெளியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், 2020 முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகாலத் தரவுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற ‘ஆய்வகங்களில் இருந்து சட்டம் இயற்றுதல் வரை: அரசு கொள்கை, வணிகம் மற்றும் சமூகத் தாக்கத்தின் மீதான ஆராய்ச்சியை இந்தியா எவ்வாறு அளவிட வேண்டும்?’ என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் பங்கேற்று உரையாற்றினாா்.

இந்நிகழ்வில் நிதி ஆயோக் உறுப்பினா் அபய் கரந்திகா், பல்வேறு பல்கலைக்கழகங்களின் வேந்தா்கள், துணைவேந்தா்கள், இயக்குநா்கள் மற்றும் இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.