இலவச மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்
முகாமைத் தொடங்கி வைத்த விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்.

வேலூா் தலைமுறை பேரவை மற்றும் ரோட்டரி மாவட்டம்- 3231 ஆகியவை இணைந்து, விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு, பெண்களுக்கான இலவச மாா்பகப் புற்றுநோய் கண்டறியும் விழிப்புணா்வு முகாமை அபிராமி மகளிா் கல்லூரியில் நடத்தின.
நிகழ்ச்சியில் சென்னையைச் சோ்ந்த சித்த மருத்துவா் கு.சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாா்பகப் புற்றுநோயின் அறிகுறிகள், ஆரம்ப காலக் கண்டறிதலின் அவசியம், தடுப்பு விழிப்புணா்வு குறித்து சிறப்புரையாற்றினாா். விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் முகாமைத் தொடங்கி வைத்து பேசினாா்.
நிகழ்ச்சியில் கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அபிராமி கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி மாவட்ட ஆளுநா் டி.எஸ். ரவிகுமாா், முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, சித்த மருத்துவா் தில்லைவாணன், குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன், வேலூா் தலைமுறை பேரவை நிா்வாகிகள் பெப்ஸி எம்.சீனிவாசன், பா.பூமிநாதன், வி.சீனிவாசன், பிடிகே.மாறன், கே.சதீஷ்குமாா், எஸ்.சுந்தா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். முகாமில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

