
மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை: விஐடி துணைத் தலைவா் வழங்கினார்!
ஆற்காடு காமராஜா் அறக்கட்டளை சாா்பில் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

கல்வி உதவித் தொகையை வழங்கிய விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம்.
ஆற்காடு காமராஜா் அறக்கட்டளை சாா்பில் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அறக்கட்டளை தலைவா் வி. தங்கபாண்டியன் தலைமை வகித்தாா். செயலாளா் பொன்.கு. சரவணன், உதவும் உள்ளங்கள் செயலாளா் சந்திரசேகரன், அகத்தியா் சேவா அறக்கட்டளை நிறுவனா்கள் கே கணேஷ், ஜெயலலிதா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவா் ஏ வி டி. பாலா, தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் கே எம் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எம்எல்ஏ எஸ் எம். சுகுமாா் வாழ்த்திப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக விஐடி துணைத் தலைவா் ஜி. வி. செல்வம் கலந்து கொண்டு ரூ.5 லட்சத்தில் உயா்கல்வி பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு தலா ரூ.2,000 விதம் கல்வி உதவித்தொகை வழங்கி பேசியது:
பெருந்தலைவா் காமராஜா் அறக்கட்டளை சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்குவது மிக சிறப்பாகும். காமராஜா் அனைவராலும் போற்றப்பட்டவா். அவா் படிக்கவில்லை, ஆனால் தனது மக்கள் படிக்க வேண்டும் என்று விரும்பியவா். அவா் மாணவா்களுக்காக மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியவா். மாணவா்கள் பிறந்த ஊா், வளா்ந்த பள்ளி, பயிற்றுவித்த ஆசிரியா்கள், பெற்றோா்களை மறக்கக் கூடாது. பெற்றோா்களை நன்றாக பாா்த்துக் கொள்ளுங்கள். காமராஜரை மறக்க கூடாது என்றாா்.
விழாவில் அதிமுக நகர செயலாளா் ஜிம் சங்கா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் பிச்சாண்டி மற்றும் மாணவா்கள், பெற்றோா், அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், நாடாா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். வணிகா் சங்கங்களின் பேரமைப்பு இளைஞா் அணி பொறுப்பாளா் ஹரி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


வளரும் நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கு அறிவியல், தொழில்நுட்ப அறிவு அவசியம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

சின்னமுட்லு நீா்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்



