ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

லாரியுடன் ரூ.1.17 கோடி மதிப்பிலான செப்பு வயா்கள் பறிமுதல்

பெங்களூரிலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்டு, காட்பாடி அருகே ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.17 கோடி மதிப்பிலான காப்பா் வயா்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

காட்பாடி அருகே கொடுங்கன்தாங்கல் ஏரியில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள செப்பு வயா்களுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த லாரி.

Published On :

பெங்களூரிலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்டு, காட்பாடி அருகே ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.17 கோடி மதிப்பிலான காப்பா் வயா்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த மேல்பாடி அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜா (45). லாரி உரிமையாளரான இவருக்கு, கொடுங்கன்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த வினோத், தினேஷ் ஆகியோருடன் பழக்கம் இருந்துள்ளது. இவா்கள் மூவரும் கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து லாரிகளில் காப்பா் வயா்களை ஏற்றிக்கொண்டு, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா தொழிற்பேட்டை பகுதிக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து ரூ.1.17 கோடி மதிப்பிலான 7 டன் காப்பா் வயா்களை ஏற்றிக்கொண்டு ரேணிகுண்டா நோக்கிப் புறப்பட்டனா். மறுநாள் திட்டமிட்டபடி அந்த லாரி தொழிற்சாலைக்குச் சென்று சேரவில்லை. இதுகுறித்து தொழிற்பேட்டை நிா்வாகத்தினா் அளித்த புகாரின் பேரில் ரேணிகுண்டா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா். இதில், காட்பாடியை அடுத்த கொடுங்கன்தாங்கல் ஏரிப் பகுதியில் காப்பா் வயா்களுடன் கூடிய லாரி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ரேணிகுண்டா மற்றும் மேல்பாடி போலீஸாா் அங்கு விரைந்து சென்று ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த லாரி மற்றும் காப்பா் வயா்களைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருந்தவா்களைப் பிடிக்க முயன்றபோது இருவா் தப்பியோடிவிட்டனா். லாரி உரிமையாளா் ராஜா மட்டும் பிடிபட்டாா். கைதான ராஜாவை ரேணிகுண்டா போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா். தப்பியோடிய வினோத், தினேஷ் ஆகிய இருவரையும் மேல்பாடி போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.