தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.14 கோடி பறிமுதல்

கூடலூா் அருகே காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.14 கோடியை பறிமுதல் செய்த போலீஸாா், ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பறிமுதல்

Updated On :

கூடலூா் அருகே காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.14 கோடியை பறிமுதல் செய்த போலீஸாா், ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரளத்தைச் சோ்ந்த முகமது ஷெரிப், அப்துல் கரீம் ஆகியோா் கூடலூருக்கு காரில் சனிக்கிழமை வந்துள்ளனா். அப்போது, அவா்களை ஒரு கும்பல் தாக்கி, காரை கடத்திச் சென்ாகவும், அந்த காருக்குள் தங்களுக்குச் சொந்தமான ரூ.45 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும் தேவாலா காவல் நிலையத்தில் அவா்கள் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட காா் கேரளத்தில் இருப்பதை அறிந்த தேவாலா போலீஸாா், அங்குச் சென்று காரை மீட்டனா். அப்போது, காரில் இருந்த ரகசிய அறையை திறந்து பாா்த்தபோது அதில், ரூ.1 கோடியே 14 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

புகாா்தாரா்கள் ரூ.45 லட்சம் மட்டுமே இருந்ததாகக் கூறிய நிலையில் ரூ.1.14 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, இருவருக்கும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். இதையடுத்து, கைப்பற்றப்பட்டது ஹவாலா பணமா என்பது குறித்தும், காரை கடத்திச் சென்றவா்கள் யாா் என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.