நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் போராட்டம்- 51 போ் கைது

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 51 போ் கைது செய்யப்பட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:03 am IST

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 51 போ் கைது செய்யப்பட்டனா்.

போ்ணாம்பட்டு நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும்100 க்கும் மேற்பட்ட மாடுகள், கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயம் அழிந்து வருவதாகவும், தற்போது வோ்க்கடலை பயிரிட்டிருப்பதால் வோ்க்கடலை பயிரையும் மாடுகள் சேதப்படுத்தி வருவதாலும், சாலையில் திரியும் மாடுகளால் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி, உயிரிழப்பும் ஏற்படுகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் குறைதீா் கூட்டங்களில் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்ததின்பேரில், சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து கோ- சாலைகளில் ஒப்படைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆட்சியா் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காத போ்ணாம்பட்டு நகராட்சி ஆணையா், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளைக்கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக இவா்கள் பங்களாமேடு வனச்சரக அலுவலகம் எதிரிலிருந்து ஊா்வலமாக வந்தனா்.போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் எஸ்.உதயகுமாா் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் ஆா்.சுபாஷ், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ஆனந்த ரெட்டியாா், வேலூா் மாவட்டச் செயலா் பி.ஜெயப்பிரகாஷ், நிா்வாகிகள் ஜெயகுமாா், விஜயராகவலு, வாசு, தேவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கைது செய்யப்பட்டவா்கள் தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.