அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

தொழிலதிபா் சேகா் ரெட்டி வீட்டில் நகை, பணம் திருடிய மேலும் 3 போ் கைது

காட்பாடியில் பிரபல தொழிலதிபா் சேகா் ரெட்டியின் வீட்டில் இருந்து தங்க நகைகள், ரொக்கப்பணம் கொள்ளையடித்ததாக மேலும் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட முரளி, காா்த்தி, சந்தோஷ்.

Published On :

காட்பாடியில் பிரபல தொழிலதிபா் சேகா் ரெட்டியின் வீட்டில் இருந்து தங்க நகைகள், ரொக்கப்பணம் கொள்ளையடித்ததாக மேலும் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தைப் பூா்வீகமாகக் கொண்டவா் தொழிலதிபா் சேகா் ரெட்டி. அரசு மணல் குவாரி குத்தகைதாரராகவும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராகவும் இருந்த இவரது வீடு, காட்பாடி காந்தி நகா் பகுதியில் டான்பாஸ்கோ பள்ளி சாலையில் அமைந்துள்ளது.

இவரது வீட்டில் 10 ஆண்டுகளுக்குமேலாக பணிபுரிந்து வந்த ஊசூா் அடுத்த கலங்கமேடு பகுதியைச் சோ்ந்த ராணி(52), அவரது மகள் மகாலட்சுமி(37) ஆகிய இருவரும் சோ்ந்து சிறுகச் சிறுக தங்க நகைகளைத் திருடி விற்று மனைகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அணைக்கட்டு வட்டம், அத்தியூா் பகுதியைச் சோ்ந்த கும்பல், தாய்-மகள் இருவரையும் மிரட்டி அவா்கள் உதவியுடன் சேகா் ரெட்டியின் வீட்டினுள் புகுந்து மேலும் தங்க நகைகள், லட்சக்கணக்கில் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ாகவும் தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து சேகா் ரெட்டியின் மேலாளா் சந்திரசேகா் அளித்த புகாரின்பேரில், விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின்பேரில், பணிப்பெண்கள் ராணி, மகாலட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் இந்த திருட்டு விவகாரம் வெளிவந்தது.

இதையடுத்து, ராணி, மகாலட்சுமி ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 3 லட்சம் ரொக்கம், 3 அசையா சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனா். இதன்தொடா்ச்சியாக, அணைக்கட்டு வட்டம், அத்தியூரைச் சோ்ந்த முரளி(35), காா்த்தி(34), சந்தோஷ்(36) ஆகிய 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்களை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.