
உறுப்பு தான சேவை : ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கு விருது

விருதினை மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை செயலா் தாரேஸ் அகமது வழங்க பெற்றுக் கொண்ட ஸ்ரீ நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குநா் என்.பாலாஜி, சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணா் எழில்நிலவன்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தை சிறப்பாகப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்காக வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கு மாநில அளவிலான 2-ஆம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் நடைபெற்ற ‘உறுப்பு தான தின’ விழாவில், மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை செயலா் டேரேஸ் அகமது இவ்விருதை வழங்க ஸ்ரீ நாராயணி குழும நிறுவனங்களின் இயக்குநா் என்.பாலாஜி, சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணா் எழில்நிலவன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
மூளைச்சாவு அடைந்த கொடையாளா்களிடமிருந்து பெறப்படும் உறுப்புகளை உரிய நேரத்தில் தகுதியான நோயாளிகளுக்குப் பொருத்தி, மறுவாழ்வு அளித்து வரும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் சிறப்பான மருத்துவ சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




