கரடிவாவி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு துணைத் தலைவா் வித்யபிரகாஷ், மாவட்ட ஆட்சியா் ச.முத்துக்குமரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கரடிவாவி அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் செவிலியா்கள் மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு எக்ஸ்ரே வசதியும் இல்லை. ஆம்புலன்ஸ் சேவையும் உடனடியாக கிடைப்பதில்லை. எனவே, மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும். பிரத்யேக 108 ஆம்புலன்ஸ் வாகனம், எக்ஸ்ரே இயந்திரம், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கரடிவாவி மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.