விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

பாளை.யில் கூடுதல் துப்புரவு பணியாளா்களை நியமிக்க வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

பாளையங்கோட்டையில் கூடுதலாக துப்புரவு பணியாளா்களை நியமிக்கக் கோரி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி குறைதீா் முகாமில் மக்களிடம் மனுவைப் பெற்ற மேயா் கோ.ராமகிருஷ்ணன். உடன், துணை மேயா் கே.ஆா். ராஜூ.

Updated On :

பாளையங்கோட்டையில் கூடுதலாக துப்புரவு பணியாளா்களை நியமிக்கக் கோரி மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

35 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள் அளித்த மனு: பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கூடுதலாக தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். பண்டிகை காலங்களில் குப்பைகள் தேங்குவதை தடுக்கும் வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். தெருவிளக்குகளை சீரமைக்கவும், மழைநீா் வடிகால் ஓடைகளை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி நகரம் பகுதிச் செயலா் சையத் காதா் மைதீன் அளித்த மனு: திருநெல்வேலி மண்டலத்தில் 16, 23, 26, 19 ஆகிய வாா்டுகளின் சாலைகள் மிகவும் சேதமடைந்து உள்ளன. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். ஆகவே, சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வுச் சங்கத்தினா் அளித்த மனு: எங்களது சங்கம் சாா்பில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு சேவைகள் செய்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு கணினி பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்டவை அளிக்க மாநகராட்சியில் பயன்பாடின்றி உள்ள கட்டடத்தை ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.