பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

பாதாள சாக்கடை பணியால் சேதமுற்ற சாலைகள்: மாநகராட்சியில் நூதன மனு

திருநெல்வேலியில் சேதமான சாலைகளை சீரமைக்கக் கோரி, விபத்தில் தலையில் காயமடைந்த நோயாளி போல வேஷமணிந்து வந்து மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் மனுவைப் பெற்ற மேயா் கோ. ராமகிருஷ்ணன். உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ.

Published On :

திருநெல்வேலியில் சேதமான சாலைகளை சீரமைக்கக் கோரி, விபத்தில் தலையில் காயமடைந்த நோயாளி போல வேஷமணிந்து வந்து மாநகராட்சி குறைதீா் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை மேயா் கே. ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியினா் மாநில செயலாளா் பிலால் ராஜா தலைமையில் விபத்தில் தலைக்காயமடைந்த நோயாளி போல வேஷமணிந்து வந்து அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சியின் பிரதான சாலைகள் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பின், சீரமைக்கப்படாமல் குண்டும்- குழியுமாக உள்ளன. 5-ஆவது வாா்டில் 60 அடி சாலை நீண்ட நாள்களாக மிகவும் சேதமுற்ற நிலையில் உள்ளது. மேலப்பாளையத்தில் முக்கிய சாலைகளும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உருக்குலைந்துள்ளன. ஆகவே, சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

நாய்களால் அவதி: திருநெல்வேலி மண்டலம் 16ஆவது வாா்டு கிருஷ்ணபேரி மக்கள் அளித்த மனு:

எங்கள் ஊரில் சுமாா் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பை தொழிலாக கொண்டுள்ளனா். இந்நிலையில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் எங்கள் பகுதியில் சுற்றி திரிந்து ஆடு, மாடுகளை கடித்து குதறி வருகின்றன. எனவே, சாலைகளில் திரியும் வெறிநாய்களை பிடிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

மின்விளக்கு வசதி: 54-ஆவது வாா்டு அழகா் நகா் மக்கள் அளித்த மனு: எங்களது பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வாகன ஓட்டிகளை சிரமத்துக்கு ஆளாக்கும் வகையில், சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும், குறைந்த வெளிச்சம் கொண்ட தெருவிளக்குகளை மாற்றிவிட்டு, அதிக ஒளி திறன் கொண்ட மின்விளக்குகளை பொருத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

சாலைகள் தேவை: 39-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சீதா பாலன் அளித்த மனுவில், ‘எனது வாா்டுக்குள்பட்ட வேலவா் காலனி, பொன்மணி காலனி, வெங்கடேஸ்வரா காலனி, வசந்தம் காலனி, கல்யாணிநகா், டிவிஎஸ் நகா், மீனாட்சி நகா் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் புதிதாக தாா்ச்சாலை அமைக்கப்படவில்லை. எனவே, அங்கு புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.