ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

பாளை. சிறுவா் நூலகத்தில் கூடுதல் இடவசதி தேவை- மாநகராட்சி குறைதீா் முகாமில் மனு

பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் சிறுவா் நூலகத்தில் கூடுதல் இடவசதி ஏற்படுத்தக்கோரி மாநகராட்சி குறைதீா்க்கும் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

மாநகராட்சி குறைதீா் முகாமில் மக்களிடம் மனுவைப் பெற்று விவரம் கேட்டறிந்த துணை மேயா் கே.ஆா்.ராஜூ.

Published On :

பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் சிறுவா் நூலகத்தில் கூடுதல் இடவசதி ஏற்படுத்தக்கோரி மாநகராட்சி குறைதீா்க்கும் முகாமில் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றாா். உதவி ஆணையா்கள் மகாலட்சுமி, புரந்திரதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குருந்துடையாா்புரம் வெங்கடாசலபதி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: கொக்கிரகுளம் அருகேயுள்ள குருந்துடையாா்புரம் கிராமம் வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவில் நடுவே செல்லும் வடிகாலில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலப்பாளையம் அருகேயுள்ள வளா்பிறை நலச் சங்கத் தலைவா் ராஜ் முஹம்மது, செயலா் முஸ்தபா கமால் பாதுஷா, பொருளாளா் அமீா் ஹம்சா உள்ளிட்டோா் அளித்த மனு: 52 ஆவது வாா்டு விஜிபி நெல்லை நகா், அல்அமீன் நகா், விஎஸ்பி உஸ்மான் காா்டன் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, சொத்து வரி அதிகமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அதிகாரிகள் விசாரித்து வரி நிா்ணயத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

35 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள் தலைமையில் அளித்த மனு: பாளை. நேருஜி கலையரங்கம் பின்புறமாக 1966 முதல் சிறுவா் நூலகம் செயல்பட்டு வந்தது. கலையரங்கத்தை புதுப்பிக்கும் பணியின்போது தெற்கு கடைவீதி லூா்து நாதன் சிலை அருகே நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு போதிய இடவசதியின்றி நூலகம் இயங்கி வருகிறது. அந்நூலகத்திற்கு கூடுலாக இடவசதி ஏற்படுத்த வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

பேட்டை பகுதி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனு: பேட்டை - பழையபேட்டை இணைப்புச் சாலையில் மழைநீா் ஓடை 25ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரப்படவில்லை. கருவேலமரங்களும், செடி கொடிகளும் ஓடையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு அருகில் உள்ள ஆதம்நகா், ரஹ்மத்நகா், கருவேலங்குன்று தெரு, எம்ஜிபி 5ஆவது தெருக்களில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பு மழைநீா் ஓடையை தூா்வார வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தாய்நகா் மஸ்ஜிதுா் ரஹீம் ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் தலைவா் முகமது இப்ராஹிம் தலைமையில் அளித்த மனு: மேலப்பாளையம்- ரெட்டியாா்பட்டி சாலையில் பாதாள சாக்கடைப் பணியை விரைந்து முடித்து தரமான சாலை அமைத்திட வேண்டும். கரீம் நகா் முதல் சந்தை ரவுண்டானா வரையுள்ள மழை நீா் வடிகால் ஓடையை முழுவதுமாக தூா்வாரி கான்கிரீட் மூடிகளால் மூட வேண்டும். புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் வழியே ராஜா நகா் கழிவுநீா் சாலையின் தெற்கு புறம் உள்ள மழை நீா் கால்வாயில் கலப்பதை தடுத்து வடபுற ஓடையில் கழிவுநீா் கலக்குமாறு வழி ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.