2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கோயில்கள் - கோப்புப் படம்

Updated On :

கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பூசாரிகள் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் சதாசிவம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பூசாரிகள், திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

பெரிய திருக்கோயில்களின் வருவாயிலிருந்து நலிவுற்ற கோயில்களுக்கு தீபம் ஏற்றுவதற்கு எண்ணெய், நெய்வேத்தியப் பொருள்கள், வஸ்திரங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் வழங்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் சிதிலமடைந்திருக்கும் கோயில்களை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தவேண்டும்.

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது போல், கோயில்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.