1 யூனிட் மின்சாரம் ரூ.35 என்றதும் 'ஷாக் அடித்தது' போல் ஆகிவிட்டது! - பெ. சண்முகம் பதிவு!
ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என்ற உடன் "ஷாக் அடித்தது" போல் ஆகிவிட்டது என சிபிஎம் மாநிலச் செயலர் பெ. சண்முகம் பதிவு...

முதல்வர் விஜய் - சிபிஎம் மாநிலச் செயலர் பெ. சண்முகம் - கோப்புப் படம்
ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என்ற உடன் "ஷாக் அடித்தது" போல் ஆகிவிட்டது எனக் கூறி மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையைத் தீர்க்க தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு கொள்முதல் செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏராளமான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதனை விமர்சிக்கும் விதமாக ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 என்றதும் ஷாக் அடித்தது போல் ஆகிவிட்டது எனக் கூறி பெ. சண்முகம் இன்று (அக். 14) பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய் என்ற உடன் "ஷாக் அடித்தது" போல் ஆகிவிட்டது. இதுவரை இப்படி ஒரு கொள்ளை விலையை கேள்விப்பட்டது கூட இல்லை.
விலைவாசி அதிகமாகும் போது, யானை விலை, குதிரை விலை சொல்றான் என்று மக்கள் கூறுவார்கள். அவசரத்திற்கு கேட்டால் அவன் சொன்னது தான் விலை என்று ஆகிவிட்டது.
தனியாருக்கு லாபம், கொள்ளை லாபம், மேலும் இலாபம் என்று தான் செயல்படுவார்களே தவிர மக்கள் நலன் என்பதெல்லாம் கடுகு அளவு கூட இருக்காது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இது” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, நாட்டில் எந்த மாநிலமும் இவ்வளவு விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதில்லை எனவும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 9.50 க்கு வாங்கிய போது ஊழல் இருப்பதாக தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் குற்றம்சாட்டியிருந்தார் எனவும் பெ. சண்முகம் பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
CPI(M) State Secretary P. Shanmugam posted that he felt "shocked" upon hearing that a single unit of electricity costs 35 rupees.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

