ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்கியதற்கு பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் - X | CPIM Tamilnadu
ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியது கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவும் மின் பற்றாக்குறையை சரிசெய்ய தனியார் நிறுவனத்திடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்குவதற்கான டெண்டரை மின் வாரியம் இறுதி செய்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவிட்டு வரும் நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பெ. சண்முகமும் விமர்சித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
”தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் மின்வெட்டு தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. எப்போது மின்சாரம் போகும், எப்போது வரும் என்று தெரியாத அளவுக்கு தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு தேவையான அளவு மின்சாரம், தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படவில்லை. ஆகையால், 5,000 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை இருப்பதாக தனியாரிடம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்து, ஒரு யூனிட் ரூ. 35-க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் எந்த மாநிலமும் இவ்வளவு விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதில்லை. ரூ. 35 என்பது மிக மிக மிக அதிகமான தொகை. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ரூ. 9.50 க்கு வாங்கிய போதே, ஊழல் இருப்பதாக தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், தற்போது அதைவிட மூன்று மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
கடைசி நேரத்தில் ஒப்பந்தம் மேற்கொள்வதால் இவ்வளவு அதிக தொகைக்கு வாங்குவதாக தெரிவிக்கிறார்கள். எல்-நினோ பாதிப்பு, போதுமான மழை இல்லை என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். முன்கூட்டியே திட்டமிட்டு குறைவான விலையில் தரும் நிறுவனத்திடம் வாங்குவதற்கு பதிலாக, நிர்வாக அலட்சியம் காரணமாகதான் இப்படி ஒரு நெருக்கடியை தமிழ்நாடு அரசு சந்தித்துள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்துக்கு கூடுதல் சுமையை அரசு ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 35 என்பது உண்மையான விலையா அல்லது கமிஷன், ஊழல் இருக்கிறதா என்பது இனிமேல்தான் கண்டறிய வேண்டும். அவ்வாறு இருந்தால் வன்மையாக கண்டனத்துக்குரியது” என்றார்.
Summary
No state has ever purchased a unit for Rs. 35! P. Shanmugam criticizes!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


