உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு! மதுரை நகைக்கடை திருட்டு! இருவர் கைது! திருடனை அடையாளம் கண்டது எப்படி?விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்: டிடிவி தினகரன் விமர்சனம் மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்

காவல் மரணம்: பாலகிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! பெ. சண்முகம்

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்தில் உரிய விசாரணை வேண்டும் என பெ. சண்முகம் வலியுறுத்தல்.

P. Shanmugam

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் - கோப்புப்படம்

Updated On :

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படுவதுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்ற ஏலக்காய் வியாபாரியிடம் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த நவ. 3 ஆம் தேதி போடியில் இருந்து மதுரைக்கு லாரியில் ஏலக்காய் ஏற்றி வந்தாகவும் மதுரை உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி தீப்பற்றி எரிந்துவிட்டதாகவும் அதுகுறித்து புகார் அளிக்க மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். சந்தேகத்தின்பேரில் அவரை காவல்துறையினர் இரவு காவல் நிலையத்தில் தங்கவைக்க, காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதுபற்றி பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த ரங்கப்பன் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன், தனியார் டெலிவரி நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கடந்த நவ. 3 ஆம் தேதி அதிகாலை, தேவாரத்தில் இருந்து மதுரைக்கு ஏலக்காய்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இவரது வாகனம் உசிலம்பட்டி - மதுரை சாலையில் வாலாந்தூர் கண்மாய் கரை அருகே தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஏலக்காய் மூட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், வாலாந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக, சம்பவத்திற்குத் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்கும், விசாரணைக்கு உதவுவதற்கும் பாலகிருஷ்ணன், மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், பாலகிருஷ்ணன் நவம்பர் 11 ஆம் தேதி அதிகாலை காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மயக்கமடைந்து கிடந்ததாகக் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பாலகிருஷ்ணனின் இறப்பு குறித்து காவல்துறையினர் கூறும் தகவல்களை ஏற்க மறுத்து அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

பாலகிருஷ்ணனின் லாக்கப் மரணம் குறித்து காவல்துறை உரிய முறையில் விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. மேலும், உயிரிழந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் அல்லது புகார் அளிக்க வருபவர்கள் காவல்துறையின் அத்துமீறலால் உயிரிழக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர்களை பணியிடை  நீக்கம் செய்வதோடு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும், இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடைபெறாவண்ணம் காவல்துறையில் உரிய சீர்த்திருத்தங்கள் செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

Summary

Custodial death: govet job to be provided to victims family: P Shanmugam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.